“செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டவை வெறும் எலும்புக்கூடுகளல்ல, படுகொலைகளின் மௌன சாட்சியங்கள்!”
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் , நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் .
சர்வதேச அங்கீகாரம் பெற்ற தடயவியல் தொல்லியல் நிபுணர்கள், தடயவியல் மருத்துவர்கள், மனித எலும்பியல் நிபுணர்கள், மரபணு ஆய்வாளர் கள் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய சுயாதீன சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
அத்தரப்பினர் செம்மணி – சித்துப்பாத்தி தொடர்பான ஆய்விலும், அகழ்விலும் பார்வையாளர்களாக அல்லாமல் நேரடிப்பங்கேற்பாளர்களாக ஈடுபடல் வேண்டும்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் சர்வதேச தரத்திலான தடயவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மரணத்திற்கான காரணம், காயங்களின் தன்மை, மரணத்தின் காலப்பகுதி மற்றும் புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறப்பட்டு, சர்வதேச தரத்திலான மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
செம்மணி – சித்துப்பாத்தி அகழ்வாய்வின் அனைத்து கட்டங்களும் முழுமையான காணொளி, புகைப்படம், வரைபடம், ஆவணப்படுத்தல் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், அவற்றுடன் தொடர்புடைய பொருட்கள், ஏனைய ஆதாரங்கள் அனைத்தும் உரிய சட்டப் பாதுகாப்புடன் பேணப்பட வேண்டும். அவை அழிக்கப்படுவதையோ, மாற்றப்படுவதையோ, ஆதாரங்கள் பாதிக்கப்படுவதையோ தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னர் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள், நீதிமன்ற ஆவணங்கள், வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். இதுபோன்று அறிக்கைகளில் விளையாடும் உள்ளக நீதிவிசாரணையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.
அகழ்வாய்வுப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேலதிக மனிதப் புதைகுழிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய விரிவான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக மாணவி கிருஷாந்தி உள்ளிட்டவர்களை படுகொலை செய்த குற்றவாளி சோமரத்ன ராஜபக்ச 1998 ஆம் ஆண்டில் செம்மணி வெளியில் தாம் கொன்று புதைத்ததாக அடையாளம் காட்டிய 21 இடங்களும் அகழ்வு செய்யப்படல் வேண்டும். போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்
எனவே செம்மணிக்கு வழங்கப்படும் நீதியே, எதிர்காலத்தில் இவ்வாறான மனிதப் பேரவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதற்கான உத்தரவாதமாக அமையும்.
