;
Athirady Tamil News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை

0

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா 14 ஆவது நாளான சனிக்கிழமை (அக். 7) பெண்கள் கபடியில் இந்தியா தங்கம் வென்று 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது.

இதனிடையே சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றுவரும் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஹாங்சோவ் நகரில் செப். 23 -ஆம் தேதி முதல் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.

14 -ஆவது நாளான சனிக்கிழமை, இந்தியா மகளிர் கபடியில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் 100 ஆவது பதக்கத்தை பெற்றது இந்தியா.

பதக்கம் விவரம்:
25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4 -ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.

வில்வித்தையில் தங்கம், வெள்ளி:
ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஓஜாஸ் டியோடாலே 149 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார், மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

மகளிர் வில்வித்தையில் தங்கம்
மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தென் கொரியா வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 149-145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் ஜோதி சுரேகா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.