வங்காளதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.0 ஆக பதிவு
டாக்கா,
வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் திரிபுராவின் தர்மநகர் பகுதியில் இருந்து வடக்கே 53 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.