;
Athirady Tamil News

யாழில் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட குமுதினி படகு சேவை

0

யாழ்.நெடுந்தீவு குறிகாட்டுவானுக்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குமுதினி படகு சுமார் ஒரு கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் திருத்தியமைக்கப்பட்ட போதும் மீளவும் பழுதடைந்த நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குமுதினி படகு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் புனரமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி முதல் போக்குவரத்து சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

மக்கள் பாதிப்பு

மேலும்,வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வடதாரகை ஆகிய இரு படகுகளும் பழுதடைந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக நெடுந்தீவு மாவிலித்துறையில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற இரண்டு படகுகளும் பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் பாடசாலைகள் மற்றும் அரச திணைக் களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக செல்லும் பொதுமக்கள் இவ்வாறான போக்குவரத்து சேவைகளின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தனியார் போக்குவரத்து படகுகளும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான படகுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.