;
Athirady Tamil News

வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு பிரித்தானிய அமைச்சர்கள் செய்துள்ள துரோகம்…

0

பிரித்தானியாவில் வாடகை வீடுகளில் வாழ்வோருக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டு, இப்போது அவர்கள் செய்யும் செயல் துரோகம் செய்வது போல உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No-Fault Evictions
அதாவது, பிரித்தானியா போன்ற சில நாடுகளில், no-fault evictions என்னும் ஒரு விடயம் உள்ளது. அது என்னவென்றால், வாடகை வீடுகளில் வசிப்போரை, அவர்களுடைய வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் சொல்லாமல், அல்லது எந்த விளக்கமும் அளிக்காமலே, இரண்டு மாத நோட்டீஸ் கொடுத்து, வீட்டைக் காலி செய்ய சொல்லலாம்.

இதனால், வீட்டு உரிமையாளர் எப்போது வீட்டைக் காலி பண்ணச் சொல்வாரோ என்ற பதற்றத்துடனேயே வாடகைக்கு குடியிருப்போர் வாழவேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது.

அமைச்சர்கள் செய்த துரோகம்
இந்நிலையில், இந்த no-fault evictionக்கு தடை விதிக்க இருப்பதாக 2019ஆம் ஆண்டே கன்சர்வேட்டிவ் கட்சியினர் உறுதியளித்தார்கள். அதற்கான மசோதாவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த மசோதாவை நிறைவேற்றுவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தற்போது பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

பிரச்சினை என்னவென்றால், இப்படி no-fault evictionக்கு தடை விதித்தால், அது தங்களை பாதிக்கும் என வீட்டு உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

விடயம் என்னவென்றால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள்!

ஆக, கட்சி அறிவித்த தடையை நிறைவேற்ற, கட்சி உறுப்பினர்களே தடையாக இருக்கிறார்கள்.

ஆகவே, no-fault evictionக்கு தடை விதிக்க இருப்பதாக கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத கன்சர்வேட்டிவ் கட்சி அமைச்சர்கள், மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.