;
Athirady Tamil News

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி காலமானார்

0

இலங்கையின் 16ஆவது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) லயனல் பலகல்ல காலமாகியுள்ளார்.

75 வயதான இவர், கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

இவரின் பூதவுடல் கடுவெல கொட்டெல்லவெல பகுதியில் அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் தளபதியாக
அவர் கடந்த 2000 முதல் 2004ஆம் ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.

ஜெனரல் பலகல்ல கூட்டுப் படைகளின் பிரதானியாகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் இடம்பெற்ற காலத்தில் லயனல் பலகல்ல படைத்தளபதியாக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.