;
Athirady Tamil News

சம்பந்தனை ஓரங்கட்டி தலைமையை பிடிக்க நினைக்கும் சுமந்திரன்!

0

அரசியல் ரீதியில் இரா.சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டுவர எம்.ஏ.சுமந்திரன் சூழ்ச்சி செய்வதாக சட்டத்தரணி கே.வி.தவராசா குற்றம்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு சட்டத்தரணி கே.வி.தவராசா கடிதமொன்றை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதில் , உள்ளூராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுக் கோரப்பட்டபோது, சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்து தமிழரசுக் கட்சியை தனிமைப்படுத்தியதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டடைப்பை திட்டமிட்டு சிதறடித்த சுமந்திரன்
அதோடு நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காவிட்டால் அரசியலை விட்டும் விலகப் போவதாகக் கூறிய சுமந்திரன், தற்போது உங்களைப் பதவிவிலகச் சொல்வது வேடிக்கையானது என்றும் கே.வி.தவராசா, தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பை சுமந்திரன் திட்டமிட்டு சிதறடித்தமையின் நோக்கம் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் இருந்து உங்களைத் தூக்கியெறிவதே என்றும் கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே உடனடியாகக் கட்சியை மீட்டு தமிழ்த் தேசியத்தின் கனவுகளைச் சுமந்த மக்களின் அபிமானமிக்க தமிழ்த் தேசியவாதி ஒருவரைக் கொண்டு தலைமைத்துவத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அதை செய்யாமல்விட்டால் அது இனத்துக்கு இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகம் என்றும் சட்டத்தரணி கே.வி.தவராசா குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.