;
Athirady Tamil News

தமிழ் விக்ரமசிங்கவாக மாறிய ஜனாதிபதி ரணில்: சமூக வலைத்தளங்களில் வெடிக்கும் சர்ச்சை

0

இலங்கை பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவால் ஜனாதிபதியில் பெயரில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்ரமசிங்க (President Tamil Wickremesinghe) என்று தவறாக எழுதப்பட்ட விடயம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தவறு விடப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம்
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ரீட் மாவத்தை றோயல் கல்லூரியில் நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடர்பான செய்தியில் பிரதமர் அலுவலகம் ஜனாதிபதியின் பெயர் தவறாக பிரசுரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரேமஜந்த, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், இரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, சி.பி.விக்னேஸ்வரன், அதிபர் கவிதா ஜயவர்தன மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு அறிவித்ததையடுத்து பிழை திருத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.