;
Athirady Tamil News

புதிய சுகாதார செயலாளர் நியமனம்

0

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வு பெறுவதால் அவரின் சேவைக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சுகாதார செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார செயலாளராக வைத்தியர் மஹிபால திங்கட்கிழமை (2023.11.20) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.

அவர் ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் WHO பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.