;
Athirady Tamil News

சிறு வயதிலேயே உலக சாதனை படைத்த இலங்கை சிறுமி!

0

இலங்கை சிறுமி ஒருவர் சிறு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து சாதித்துள்ளார்.

பிரித்தானியா – பிரிஸ்டலில் நடைபெற்ற 11வது MTM Young Achievers விருது வழங்கும் விழாவில், இலங்கை சிறுமி வெற்றி பெற்றுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 15 வயதான யெனுலி பினாரா Yenuli Binara என்ற இலங்கை சிறுமியே இவ்வாறு, 2023 MTM YOUNG ACHIEVERS விருதை வென்றுள்ளார்.

குறித்த போட்டியின் இறுதிச் சுற்றில் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்ட யெனுலி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல போட்டியாளர்களுக்கு மத்தியில் இந்த விருதை வென்றுள்ளார்.

கொழும்பை பிறப்பிடமாக கொண்ட யெனுலி, தற்போது தனது பெற்றோருடன் பிரித்தானியாவில் வசித்து வருவதுடன், இதற்கு முன்னர் ஓமானில் உள்ள இலங்கை பாடசாலையில் கல்வி கற்றுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில், இசை, பாடல், பேச்சு, நடிப்பு என பல துறைகளில் பல நாடுகளில் பல போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

12 வயதில், நூறு என்ற சர்வதேச அமைப்பின் உலகின் இளைய தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒரு சிறந்த புதிய உலகத்தை உருவாக்குவதற்கான எனது பயணத்திற்கு ஒரு பெரிய சாதனை மற்றும் உந்துதல் என விருதை வென்ற சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் சிறப்பாக விருது வழங்கும் விழா கடந்த 25ஆம் திகதி பிரித்தானியாவின் பிரிஸ்டல் மேரியட்டில் உள்ள டெல்டா ஹோட்டலில் நடைபெற்றது.

உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக வலம் வருகின்றார்.

இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.