;
Athirady Tamil News

ஹமாஸின் சுரங்கப் பாதைக்குள் நவீன வசதிகள்: திகைப்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை

0

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய சுரங்க பாதை அமைப்பை கண்டுபிடித்துள்ளது.

சிக்கலான வலைப்பின்னல்
4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்துள்ள இந்த சுரங்கப்பாதை அமைப்பு Erez எல்லை கடப்பு பகுதியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தொடங்குவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேன்கூடு அமைப்பிலான வலைப்பின்னல் சுரங்கப் பாதைக்குள் மின்சார வசதி, தொடருந்து தண்டவாளங்கள், தொலை தொடர்பு நெட்வொர்க் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், காற்றோட்ட வசதி ஆகியவை வெகு சிறப்பாக செய்யப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.

இந்த கட்டமைப்பை வடிவமைப்பதற்கு பல மில்லியன் டொலர் செலவும், பல ஆண்டுகள் கால அளவும் எடுத்து இருக்கும் என்று இஸ்ரேல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த சிக்கலான வலைப்பின்னல் சுரங்கப்பாதையை வடிவமைத்தவர் அக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரர் மொஹமட் யஹ்யா என்று இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சுரங்கப்பாதையில் இருந்து தாக்குதலுக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.