;
Athirady Tamil News

மழை வெள்ளம் எதிரொலி தென் மாவட்ட மக்களே உஷார்! மின்சார வாரியம் எச்சரிக்கை..!

0

மின் இயந்திரங்களை பாதுகாப்பாக பயன்படுத்த மின்வாரியம் எச்சரிக்கை செய்துள்ளது.

மழை வெள்ளம்
தூத்துக்குடி, நெல்லை போன்ற மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழக்கை பெரும் பாதிப்பை சந்தித்தது. அரசு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொஞ்ச கொஞ்சமாக மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தான் மின்வாரியம் மக்களுக்கு பெரும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.

மின்சார வாரியம் எச்சரிக்கை..!
கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கன மழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால் பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.

2. நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

3. வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.

4. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக்கூடாது.

5. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக்கூடாது.

6. மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.