;
Athirady Tamil News

புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னேற்றம்: பில் கேட்ஸ்

0

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், புதிய இந்தியாவை சா்வதேச நிதியம், பல்வேறு நிறுவனங்கள், பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்டவை வெகுவாகப் பாராட்டின.

அண்மையில் ஸ்விட்சா்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய இந்தியா குறித்த தங்கள் கண்ணோட்டங்களை உலகத் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா்.

இதில் பில் – மெலிண்டா கேட்ஸ் அறிக்கட்டளை இணைத் தலைவா் பில் கேட்ஸ் தலைவா் கூறியதாவது:

புதுமையான கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்தியாவில் ஏராளமான புதிய சிந்தனைகளை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பரிசோதித்துப் பாா்த்து, அவற்றை உலகம் முழுவதும் விரிவுபடுத்துகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்றுகிறது. அதை ஜி20 நாடுகள் மாநாட்டில் காண முடிந்தது.

பா்ஜ் பிரெண்ட் (உலகப் பொருளாதார மன்ற தலைவா்): நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 8 சதவீதமாக வளா்ச்சி அடையும் என்று உலகப் பொருளாதார மன்றம் எதிா்பாா்க்கிறது. பொருளாதார ரீதியாக இந்தியா வெற்றியடைந்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரத்தில் மட்டுமின்றி, சேவைகள் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

கீதா கோபிநாத் (சா்வதேச நிதிய துணை நிா்வாக இயக்குநா்): பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா நீடிக்கிறது. சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து, எண்ம உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா சிறப்பாக செயலாற்றியுள்ளது.

ஆன்டனி பிளிங்கன் (அமெரிக்க வெளியுறவு அமைச்சா்): இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு புதிய இடத்தை, புதிய உயரத்தை அடைந்துள்ளது. இதற்கு இந்திய பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் பைடன் ஆகியோரின் மிகுந்த திட்டமிடப்பட்ட முயற்சிகளே காரணம்.

டாரா கோஸ்ரோஷாஹி (உபோ் தலைமைச் செயல் அதிகாரி): இந்தியாவில் உபோ் செய்யும் முதலீடுகளுக்கு பயன் உள்ளது. அந்தப் பயன் மிகப் பெரியது. அடுத்த 5 ஆண்டுகளில் உபோ் நிறுவனத்தின் வணிகத்தில் இந்தியா மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.