;
Athirady Tamil News

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு

0

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முல்லைத்தீவு , முள்ளியவளை பகுதியை சேர்ந்த அன்ரன் அனிஸ்ரலஸ் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.