;
Athirady Tamil News

என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!

0

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உச்சநீதிமன்றம் சென்றாவது தங்களது சின்னத்தை பெறுவோம் என நாம் தமிழர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.

கரும்பு – விவசாயி சின்னம்
தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி அப்போது முதலே கரும்பு – விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வருகின்றது. ஆனால், இம்முறை அக்கட்சிக்கு அந்த சின்னம் பெற சற்று சிக்கல்கள் எழுந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட அக்கட்சி, இம்முறை 11 மாநிலங்கள் அதாவது தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் அக்கட்சி போட்டியிட போவதாகவு தகவல் வந்துள்ளது.

இது தான் தற்போது நாம் தமிழர் கட்சிக்கு சிக்கலாக மாறியுள்ளது. மாநில கட்சி ஒன்று தேர்தல் அங்கிகாரத்தை பெற வேண்டுமென்றால், மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 % வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். மேலும், அத்தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதே போல, நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 % வாக்குகளுடன் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மாநில தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 % இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள எம்.பி தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். இந்த நிபந்தனைகளை ஒரு கட்சி பெற்று விட்டால் அக்கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரத்தை பெற்றுவிடும்.

2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் 6.72 %வாக்குகளை பெற்றிருந்தது நாம் தமிழர் கட்சி. கட்சி தேர்தல் களத்தில் முதல் முறை நின்ற போது அதாவது 2016-ஆம் ஆண்டின் தேர்தலில் வெறும் 1.1% வாக்குகளை மட்டுமே பெற்ற நா.த.க வின் வாக்குகள் தற்போது கிட்டத்தட்ட 7 % வரை உயர்ந்துள்ளது. இந்த வாக்குவங்கி வளர்ச்சி தான் நா.த.க’விடம் இருக்கும் ஒரே வழியாகும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் வாக்குவங்கியை இன்னும் உயர்த்தும் முனைப்பில் இருக்கும் நா.த.க.வினர் இதனை மேற்கொள்ள காட்டி உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என்று கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 3.75% பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.