;
Athirady Tamil News

10வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில் ஆரம்பம்

0

இலங்கையின் 10வது தேசிய சாரணர் ஜம்போரி “மாற்றத்திற்கான தலைமைத்துவம்” எனும் தொனிப்பொருளில் திருகோணமலையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வானது, இன்று (19.02.2024) தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும், ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச சாரணர் தலைவர்கள் இன்று தொடக்கம் திருகோணமலைக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

உட்கட்டமைப்பு வசதிகள்
இதன்போது, 11,500க்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சாரணர் தலைவர்கள் இதில் பங்குபற்றுகின்றனர்.

திருகோணமலை சிறீ கோணேஸ்வரா கல்லூரி மைதானத்தை மையமாக கொண்டு நடைபெறும் இந்த ஜம்போரிக்கு அதன் அருகே காணப்படும் மைதானங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பங்குபற்றுனர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி விஜயம்
மேலும்,எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜம்போரியின் அங்குரார்ப்பண வைபவம் நடைபெறவுள்ளது.

இதன்போது, 21ஆம் திகதி தொடக்கம் காலை முதல் இரவு 9.00 மணிவரை பொது மக்கள் ஜம்போரியை பார்வையிட முடியும். ஜம்போரி நடைபெறுவதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மைதானத்தில் கூடாரங்களை அமைத்து சாரணர் தலைவர்கள் பல்வேறு பிரயோக செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தலைமைத்துவம் ,புத்தாக்கம் உட்பட பல துறைகளில் தம் திறமைகளை வெளிக்கொணர சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை, திருகோணமலை மாவட்ட செயலகம் உட்பட பல அரச தனியார் துறை நிறுவனங்கள் இதனை சிறப்பாக நடாத்த பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன.

மேலும்,இந்நிகழ்வில் திருகோணமைலையின் சுற்றுலா அபிவிருத்திக்கு இந்த ஜம்போரி வலுசேர்க்க கூடியதாக அமையும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.