;
Athirady Tamil News

20 வருடங்களுக்கு மேலாக கடனுக்கு அதிக வட்டியைச் செலுத்தும் நாடாக இலங்கை

0

உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கு அமைய, அரச வருமானத்தில் இருந்து கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடு இலங்கையே என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது

2000 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் அதன் வருமானத்திலிருந்து, கடனுக்காக 33 சதவீத வட்டியை செலுத்தியது. அதன்படி, அந்த ஆண்டில் கடனுக்காக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் இருந்தது.

மத்திய வங்கி அறிக்கை
2010 ஆம் ஆண்டு, கடனுக்காக அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்பட்டது. அந்த ஆண்டில் செலுத்திய வட்டியானது அரச வருமானத்தில், 42 சதவீதமாகும்.

பின்னர் இலங்கை தமது அரச வருமானத்தில், 2020ஆம் ஆண்டில் 71 சதவீதத்தையும், 2023ஆம் ஆண்டு 77 சதவீதத்தையும் கடனுக்கான வட்டியாக செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

லெபனான் முதலாம் இடத்தில்
இதேவேளை 2020 ஆம் ஆண்டில், அரச வருமனாத்திலிருந்து, கடனுக்கு அதிக வட்டி செலுத்தும் நாடுகளில் லெபனான் முதலாம் இடத்தில் காணப்பட்டது. அது அரச வருமானத்தில், 95 சதவீதமாக காணப்பட்டது.

இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கடனுக்காக அதிக வட்டியை செலுத்தும் நாடாக இலங்கை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.