;
Athirady Tamil News

காங்கேசன்துறை கடற்கரையில் சிரமதானம்

0

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை கடற்கரை பகுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிரமதானம் செய்யப்பட்டது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் , வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் , சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நிகழ்வில் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.