;
Athirady Tamil News

காதல் கணவனால் புதுபெண்ணுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; வரதட்சணையால் கசந்த காதல்

0

பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாரபாத் சாயாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தன்னுடைய காதலனை 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

வரதட்சணை
கணவனின் வீட்டிற்கு வந்தது முதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க துவங்கினர். அவர்களுடன் சேர்ந்து கணவனும் வரதட்சணை கேட்டு மனைவிக்கு தொல்லை கொடுத்ததுடன் மனைவியை கடுமையாக தாக்கி படுகாயம் அடைய செய்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த அனுஷாவின் குடும்பத்தினர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க செய்து தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தனர்.

இந்நிலையில், அங்கு சென்ற கணவன் “இனிமேல் இதுபோல் நடக்காது. நான் உங்கள் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன்.” என்று வாக்குறுதி அளித்து அனுஷாவை மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். மீண்டும் வரதட்சணை பிரச்சினை ஆரம்பமான நிலையில் கணவன் மனைவியை மயங்கி விழும் வகையில் தலையில் கட்டையால் கொடூரமாக தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் குறித்த பெண் தாக்கப்பட்டது தொடர்பாக பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி பெண்ணின் கணவனை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி தன்னை காதலித்து கரம் பிடித்த மனைவியை சாகும் வகையில் அடித்தே கொலை செய்த கொடூர கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.