;
Athirady Tamil News

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண விருந்து: 2500 வகையான உணவுகள் ஏற்பாடு

0

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகாவுக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு வெகு விமர்சையாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஆசியாவின் பெரும் கோடீஷ்வரர் வீட்டு திருமண கொண்டாட்டம் என்பதால், ஒவ்வொரு நாளும் இது குறித்து பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிவருகின்றன.

குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் மூன்று நாட்களுக்கு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை ஆனந்த் மற்றும் ராதிகா நடத்த உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பிரபலங்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்வார்கள்.

இந்த கொண்டாட்டங்களின் போது விருந்தினர்களுக்கு ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருமுறை பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மெனு (special menu) தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 2,500 உணவுகளை தயாரிக்க 21 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

விருந்தினர்களுக்கு இந்திய உணவு வகைகள் மற்றும் ஜப்பானிய, மெக்சிகன், தாய் மற்றும் பார்சி பாரம்பரிய உணவுகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

காலை உணவாக 75 வகை உணவுகளும், மதிய உணவாக 225 உணவுகளும், இரவு உணவிற்கு 275 வகைகளும் வழங்கப்படும்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, விருந்தினர்கள் விரும்பும் 85 உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.