;
Athirady Tamil News

சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா? : நீதிபதிகள் கேள்வி

0

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை எனவும் தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மரங்களை அகற்ற கோரி 2 ஆண்டுகளான நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்காக 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்தது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தாவது:

வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமதள பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்?

ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை எனத் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.