;
Athirady Tamil News

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேச்சு : சிஐடிக்கு அழைக்கப்பட்ட மைத்திரி

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர் நாளையதினம்(25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மைத்திரியின் கருத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தற்போது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

மத நிகழ்வொன்றில் அண்மையில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என்றும் நீதிமன்றத்தால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்கு தான் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.