;
Athirady Tamil News

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி சூடு: பதறி ஓடிய பக்தர்கள்

0

அயோத்தி ராமர் கோவிலில் துப்பாக்கி வெடித்தால் பக்தர்கள் பதறி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோவில்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த ஜனவரி 22-ம் திகதி நடைபெற்றது.

இந்த கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் பிறகு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இருக்கக்கூடிய ராம பக்தர்கள், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை புரிந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.

நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பால், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ராமர் கோயில் வளாகத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று  கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியதால், பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி சூடு சம்பவம்
பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி முழங்கியதால் அங்கிருந்த பக்தர்கள் பதறி அடித்து நாலாபுறமும் ஓடினார்கள்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த காவலரை, மீட்டு உடனடியாக அருகில் உள்ள அயோத்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவலரின் மார்பின் இடதுபுறம் தோட்டா பாய்ந்து, ஆழமாக இறங்கியுள்ளதாகவும், நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர், மேல் சிகிச்சைக்காக லக்னோவில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு அதிகாரியாக கடந்த 6 மாதங்களாக ராம் பிரசாத் என்பவர் இருந்து வந்துள்ளார்.

இன்று அவரது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் குண்டு சீறி அவரது உடம்பில் பாய்ந்தது தெரியவந்துள்ளது.

அயோத்தி ராமர் கோயிலில் துப்பாக்கி சூடு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.