;
Athirady Tamil News

தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

0

எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத் திட்டங்கள் எமது பிரதேசங்களின் தனித்துவங்களை பிரதிபலிக்கும் வகையிலும் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையிலுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சமுர்த்தி வேலைத் திட்டங்களை சமூக வலுவூட்டலை நோக்கி முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இன்று (04.04.2024) இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

சமுர்த்தியில் நான் பார்த்த பணிப்பாளர்களுக்குள் இன்றைய பணிப்பாளர் ஒரு ஆற்றல் மிக்கவராக உள்ளார். அவர் இந்த ஆற்றலுடன் தொடர வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல எங்களுடைய அரசாங்க அதிபரும் சளைக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்.
இதேவேளை யாழ். மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக தெரிவித்திருந்தார்கள்.

இதேவேளை சமுர்த்தி அதிகாரிகளின் கடமைகள் பொறுப்புகள் பிரதேச மட்டங்களில் அந்தந்த பிரதேச செயலாளர்கள் கீழே செயல்படுகின்றதாலும் என் மேல் இருக்கக்கூடிய ஒரு நம்பிக்கை காரணமாக அந்த கருத்தக்களை வெளிப்படுத்தி இருந்தீர்கள்.

ஆனாலும் குறித்த தரப்பனர் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியிருந்ததாக அதன்பிறகு நான் கேள்விப்பட்டேன் எவ்வாறாயினும் அப்படி பழிவாங்கல்கள் நடந்திருக்கக் கூடாது. இனிமேல் நடக்கவும் கூடாது என நான் விரும்புகின்றேன்.

உங்களுக்கு தெரியும் இந்த காலகட்டத்தில் வடக்கில் சமுர்த்தி எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட என்று. வடக்கில் பெரும்பான்மையான சமுர்த்தி நியமனங்கள் எனது காலகட்டத்தில் தான் நியமிக்கப்பட்டது என நினைக்கின்றேன்.

இதேவேளை சமூர்த்தி அறிமகப்படுத்தப்பட்டபோது நாட்டினுடைய குறிப்பாக யாழ் மாவட்டத்தினுடைய சூழ்நிலை எவ்வாறு இரந்தது என்றும் உங்களுக்கு தெரியும்.
அந்த நேரத்தில் உங்களுக்கான ஒரு வரப்பிரசாதமாகவும் இதை நான் இங்கு கொண்டுவந்திருந்தேன். அதே நேரத்தில் சமுர்த்தி திட்டங்களின் பலாபலன்கள் மக்களிடம் எடுத்துச் செல்ப்படுவதை உறுதி செய்வதே எனது இலக்காகவும் இருந்தது.

அதனடிப்படையில் சமுர்த்தி என்ற அரச தொழில் வாய்ப்பை நான் உங்களுக்கு பெற்று கொடுத்திருந்தேன். இதேநேரம் அன்றைய காலத்தில் இருந்த ஜனாதிபதி இந்த மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தை அமுல்படுத்த விருப்பியிருக்கவில்லை.

ஆனாலும் அன்று எமக்கு நாடாளுமன்றில் கூடின ஆசனங்கள் இருந்தபடியால் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து அதை நாங்கள் இங்கு கொண்டு வந்திருந்தோம்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற இந்த சமுர்த்தி திட்டம் இந்த மாவட்டத்தில் நியமனம் பெற்ற உங்களுக்கான வரப்பிரசாதமாக இருந்தாலும் அது எமது மக்களுக்க பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதை நான் தொடர்ந்தும் முன்னெடுக்க விரும்புறேன் அதற்காக உங்களுடைய மனப்பூர்வமா ஒத்துழைப்புகள் பங்களிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.

பொதுவாக என்னுடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் மக்கள் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும். அது ஆயுதப் போராட்ட வரலாறாக இருக்கலாம் அல்லது தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டபின்னரான இன்றைய செயல்பாடாக இருக்கலாம்.
ஆனால் துரதிஸ்டவசமாக என்னால் அந்த இலக்கை நோக்கி முழுமையாக போக முடியவில்லை. அதற்கு காரணம் போதிய வாக்குகளும் போதி ஆசனங்களும் கிடைக்காதமையே ஆகும்.

இதேவேளை அன்று நான் சொல்லி வந்ததை மறுதலித்த எல்லாரும் இன்று அதை விட்டால் வேறு வழியில்லை என்று சொல்லி அதை நோக்கி முணுமுணுக்க இருக்கின்றார்கள்.
ஆனால் அன்று அவர்கள் எதிர்த்ததும் இன்று அதனை நோக்கி முணுமுணுப்பதும் ஒரு உண்மை தன்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்நிலையில் மக்களை சரியான திசைவழி நோக்கி கொண்டு போக வேண்டும். அது அரசியல் ரீதியாக இருக்கலாம் அவர்களுடைய வாழ்வாதார ரீதியாக கூட இருக்கலாம்.

இதை அரச பணியாளர்களாக இரக்கும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும். தொடர்ந்து மக்கள் கையேந்துகின்றவர்களாக இருக்கக்கூடாது அவர்களை உற்பத்தியாளர்களாக அல்லது தங்களுடைய காலில் இருந்து தங்களது வாழ்வியலை கொண்டு செல்பவர்களாக மாற்றமடைய வேண்டும்.

குறிப்பாக சமுர்த்தி உத்தியோகம் கிடைத்தன் ஊடாக நீங்கள் என்ன மாதிரி உங்களது காலில் தைரியமாக கௌரவமாக நின்று செயல்படுகின்றீர்களோ அது போன்று எமது மக்களையும் முன்னெடுக்க வேண்டும் அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.