;
Athirady Tamil News

சூரிய ஒளியை திருப்பி அனுப்பி ; பூமியை குளிர்விக்க அமெரிக்க ஆய்வாளரின் திட்டம்

0

கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர்.

உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்த பூமிக்கு உள்ளது. பருவநிலை மாறுபாடு, இயற்கை சீற்றங்கள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு வெப்பமயமாதலே காரணமாக உள்ளது.

கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி புவி வெப்பமயமாதலை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்க உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக பாரீஸ் பருவநிலை உச்சி மாநாட்டில் திட்டம் வகுக்கப்பட்டது. எனினும், இந்த திட்டத்தை முழுமையாக பின்பற்ற முடியாமல் உலகநாடுகள் தடுமாறி வருகின்றன.

இது ஒருபக்கம் இருக்க சமீப ஆண்டுகளில் புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 2023 ஆண்டு தான் பூமி அதன் வெப்பமான ஆண்டை பதிவு செய்தது. வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இதனால் பூமியின் வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இறங்கி உள்ளனர். பூமியைத் தற்காலிகமாகக் குளிர்விக்க புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர்.

அதாவது சூரியனில் இருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்புவதே இந்தத் திட்டமாகும். இதற்காக அவர்கள் கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம்.

இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில்நுட்பமாகும் இந்த மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி அனுப்பிவிடுமாம்.

இதன் காரணமாகப் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும். இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சான் பிரான்சிஸ்கோவில் விமானத்தில் இருந்து அதிக வேகத்தில் உப்புத் துகள்களை வானத்தில் தூவியிருக்கிறார்கள்.

அதாவது உள்ளே வரும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மேகங்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.

1990ல் பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஜான் லாதம் என்பவர் முன்மொழிந்த திட்டத்தை இப்போது இவர்கள் செயல்படுத்துகிறார்கள்.

இது குறித்த ஆய்வு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இது வெற்றியடைந்தால் பூமியின் வெப்பத்தை இது கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், இது நிச்சயம் தற்காலிகமான தீர்வாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.