;
Athirady Tamil News

நாட்டின் எரிபொருள் தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: அமைச்சர் விளக்கம்

0

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2020 மற்றும் 2021 இல் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை மட்டுப்படுத்தப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பின்வரும் மூன்று (03) காரணங்களுக்காக 2022 இல் எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மின்வெட்டு காலம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் (CEB) மின் உற்பத்தி நிலையங்களுக்கு கனரக எரிபொருள் எண்ணெய் கிடைக்காததன் காரணமாக டீசலின் தேவை அதிகரித்தது.
மின்வெட்டு காலத்தில் மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் தேவை அதிகமாக இருந்தது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளின் போது எரிபொருளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருள் விநியோகம் மற்றும் தேவை இயல்பாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

எரிபொருள் பாவனை
இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் எரிபொருள் பாவனை குறைக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது, அப்போது, அந்த சங்கத்தின் தலைவர், நாட்டின் பொருளாதார நிலையும் எரிபொருள் நுகர்வு குறைவதற்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.