;
Athirady Tamil News

1000 கோடியும்..26’இல் முதல்வர் பதவியும் – ஆனாலும் நா கூட்டணிக்கு போகல – சீமான் பரபரப்பு பேச்சு

0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றார்.

நாம் தமிழர் கட்சி
எடுத்துக்கொண்ட கொள்கையில் உறுதியானவராகவே இருக்கும் சீமான், தொடர்ந்து எக்கட்சியுடனும் கூட்டணி என விடாப்பிடியாக நிற்கிறார். அதுவே அவருக்கு ஒரு பலமாக மாறியுள்ளது.

இருப்பினும் தேர்தல் அரசியல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போவது தான் லாபகரமானதாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

1000 கோடி
தேர்தல் பிரச்சாரங்களில் கூட சில சமயங்களில் தங்கள் கட்சியை கூட்டணிக்கு அழைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் அவர் அவ்வப்போது கூறி வருகின்றார்.

அப்படி சீமான் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் கவனத்தை பெற்று வைரலாகி வருகின்றது. அதாவது கூட்டணிக்கு வர தங்களுக்கு 1000 கோடி ரூபாய் – 15 மக்களவை சீட் கொடுப்பதாக தெரிவித்துள்ளார் சீமான்.

அது பலரையும் ஆச்சரியத்தில் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால், வரும் 26 சட்டமன்ற தேர்தலில் அவர் தான் முதல்வர் என்றும் உறுதியளித்தாக சீமான் தெரிவித்துள்ளார்.

இதனை சீமான், நேற்று(ஏப்ரல் 11) நாமக்கல் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பேசியபோது கூறிய கருத்துக்களாகும். இப்படி சீமான் கூறினாலும், எந்த கட்சி இவ்வாறு கூறியது என்பதை ஒருமுறை குறிப்பிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.