;
Athirady Tamil News

போலி நாணயத்தாள் அச்சீடு: ஒருவர் கைது

0

போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(12) இரவு இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்தேக நபர் 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டு
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் 47 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதற்காக பெறப்பட்ட 10 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் அஹங்கம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் காலி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.