;
Athirady Tamil News

மத்திய தரைக்கடல் பகுதியில் படகிலிருந்து மீட்கப்பட்ட 4 பெண்களின் சடலங்கள்: விசாரணைகள் தீவிரம்

0

ஸ்பெயினின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மிதந்து வந்த படகிலிருந்து 4 பெண்களின் சடலங்கள் காணப்பட்டதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த படகை நேற்றையதினம் (12) காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

இறப்புக்கான காரணம்
படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அங்கிருந்து புலம்பெயர்ந்து ஸ்பெயினில் குடியேறுவதற்காக படகில் வந்தபோது இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த படகில் வேறு யாரும் இல்லை. புறப்படும்போது வேறு யாரேனும் அவர்களுடன் வந்தார்களா? என்ற விவரமும் தெரியவில்லை.

ஆபத்தான கடற்பயணம்
மேற்கு ஆபிரிக்காவில் வறுமை, உள்நாட்டு சண்டை, மோதல்கள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை போன்ற காரணங்களால் அங்கிருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், படகு மூலம் ஸ்பெயினுக்கு வர முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான ஆபத்தான கடற்பயணத்தில் பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டில் மார்ச் 31-ம் திகதி வரை 15,351 புலம்பெயர்ந்தோர் படகு மூலம் ஸ்பெயினுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்தவர்களைவிட 4,000 அதிகம் ஆகும் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கேனரி தீவு பாதையில் வந்துள்ளனர். என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.