;
Athirady Tamil News

ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகள் தானம்; துறவறம் மேற்கொண்ட தம்பதி!

0

ஜெயின் தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடை அளித்து துறவறம் மேற்கொண்டனர்.

ரூ.200 கோடி தானம்
குஜராத் மாநில த்தில் உள்ள ஹிம்மத்நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி.அவருக்கு திருமணமாகி மகள், மகன் உள்ளனர். ஜெயின் மதத்தைச் சேர்ந்த இவர் தனது 19 வயது மகள், 16 வயது மகன் ஆகியோர் கடந்த 2022ம் துறவறம் மேற்கொண்டார்.

இவர்களை தொடர்ந்து அவரது மனைவியும் தாங்களும் துறவறம் பூண்டுகொள்ள உறுதி செய்தனர். பவேஷ் பண்டாரி கட்டுமான தொழில் செய்து வந்தார். இவருக்கு ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. ஜெயின் மதப்படி துறவறம் பூண்டுகொள்பவர்கள் தீட்சை பெறுவது முக்கியத்துவமானது.

தம்பதி துறவறம்
அதன்படி, தங்களது சொத்துபத்துகளை துறந்து நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து பிச்சை பெற்று ஜீவிதம் செய்ய வேண்டும். மேலும், ஜெயின் துறவிகள் அமரும் முன் பூச்சிகளைத் துலக்குவதற்கு விளக்குமாறு, இரண்டு வெள்ளை ஆடைகள், பிச்சை கிண்ணம் ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.

இது அவர்கள் பின்பற்றும் அகிம்சைப் பாதையின் அடையாளமாகும். இந்த நிலையில், பர்வேஷ் தம்பதியினர் அண்மையில் 35 பேருடன் சேர்ந்து 4 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் ராஜா, ராணி போன்று சிறப்பு ஆடையை அணிந்திருந்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் ரூ.200 கோடி மதிப்பிலான தங்கள் உடைமைகள் அனைத்தையும் நன்கொடையாக வழங்கினர். தங்களிடம் இருந்த மொபைல் போன்கள், ஏர் கண்டிஷனர்கள் உட்பட அனைத்தையும் வழங்கினார்.இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.