;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அறிமுகமாகும் ஈ-விசா! குடியேற்றவாசிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

0

பிரித்தானியாவில் (United Kingdom) குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் ஈ-விசா (e-Visa) வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்ற ஆவணங்களை கைவசம் கொண்டுள்ள தரப்பினருக்கு அவற்றை ஈ-விசாவுக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பான செயல்முறையை உள்ளடக்கிய ஈ-மெயில் (E-mail) இன்று (17) முதல் அனுப்பப்பட்டு வருகிறது.

குடியிருப்பு அனுமதி
குறித்த ஈ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ள பயோமெட்ரிக் குடியிருப்பு அனுமதி (Biometric Residence Permits – BRPs) எனும் இணையத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்குவதன் மூலம், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு ஈ-விசாவை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, பிரித்தானியாவி்ல் உள்ளவர்கள், தங்கள் குடியேற்றத்துக்கான சான்றாக பயன்படுத்த முடியுமென கூறப்பட்டுள்ளது.

மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதையும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் முதன்மையாக கொண்டு இந்த ஈ-விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பாதிப்பு இல்லை
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஈ-விசா மூலம், தற்போது பிரித்தானியாவில் உள்ளவர்களின் குடியேற்ற நிலைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ-விசா பாதுகாப்பானது எனவும் இதனை யாரும் திருட முடியாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கைவசம் கொண்டுள்ள ஆவணங்களுடன் ஒப்பிடுகையில் ஈ-விசாவை பயன்படுத்துவது மிகவும் இலகுவானது என கூறப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த விடயங்களை இணையவழி மூலம் சில நிபந்தனைகளுடன் இலகுவாக திருத்த இந்த ஈ-விசா நடைமுறை உதவுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.