யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்… கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் கணவன் ஒருவர் மனைவியை, கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த் சம்பவம் நேற்றைய தினம் (17-04-2024) மாலை அராலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், தாக்குதலை மேற்கொண்ட கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.