சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலிக்கு பிடியாணை
சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (12) அவருக்கெதிரான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக ஹோமாகம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி திலினி பிரியமாலி சார்பாக எந்த சட்டத்தரணியும் விசாரணைக்கு ஆஜராகாததால் குறித்த விசாரணை ஜூன் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த காலங்களிலும் பல்வேறு குற்றசாட்டுகளில் திலினி பிரியாமாலி கைதாகி விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.