மீண்டும் கொழும்பில் குடியேறும் மஹிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கொழும்பில் தங்குவதற்குத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதன்படி, கொழும்புப் பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொருத்தமான வீடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைகள் பெறுவதற்கு இலகுவாக இருப்பதும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏதுவாக கொழும்பில் குடிபெயர உள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சத்திர சிகிச்சை மேற்கள்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.