வெளிநாடொன்றில் கடுமையான வெப்ப அலை: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!
வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்காளதேசின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா (Magura) மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
கடுமையான வெப்ப அலை
கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது.
இதன் காரணமாக பாடசாலைகள், கல்லூரிகள், மதரஸா, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.