யாழில் பாரிய தீப்பரவல்
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையில் உள்ள இணுவில் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு பெரும் தீப்பரவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணுவில், காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பைக் கிடங்கிலேயே பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் முயற்சித்தனர்.
எனினும் தற்போது நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாகப் பாரிய தீப்பரவல் ஏற்பட்டது. தீ பரவிய நேரம் முதல் பிரதேச சபை செயலாளர் ஜெலீபன் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் பலரும் சம்பவ இடத்தில் நின்று அதனைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சி செய்தனர்.
அதேவேளை இந்தக் குப்பைக் கிடங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் பாரிய தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.