;
Athirady Tamil News

யாழில். சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

0

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணையில் , சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாய் தந்தையை இழந்த பின்னர் , சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் , சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

அதனை அடுத்து , சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை , வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் , மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்தான் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தமையை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கு பெண்ணின் உடல் நிலை மோசமானதை அடுத்து , பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் , தன்னை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தன்னை சகோதரனே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததாகவும் , வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும் , சகோதரன் மீதான பயத்திலையே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.