;
Athirady Tamil News

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய பிரதமர் தெரிவு

0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Transnational Government of Tamil Eelam) நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர்.

இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு

இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தேர்வு நடைபெற்றது.

அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.