;
Athirady Tamil News

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

0

முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சபுகஸ்கந்த – தெனிமல்ல பிரதேசத்தில் நேற்று (11) இரவு அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து சம்பவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.