;
Athirady Tamil News

viral video: கழுகை ஆட்டம் காண வைத்த குட்டி பறவை… வியபூட்டும் காட்சி

0

அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு ராச்சத கழுகின் தலையில் ஒரு சிறிய பறவை எல்லா திசைகளிலும் இருந்து வந்து தட்டிவிட்டு செல்லும் வியப்ட்டும் காட்சியடங்கிய காணொளியியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக கழுகுகள் பறவைகள் உலகின் அரசன் என வர்ணிக்கப்படுகின்றது.அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கழுகை கருதுகிறார்கள்.

அசைவப் பறவையான இவைதான் பொது இடங்கள், காடுகளில் இறந்து கிடக்கும் விலங்குகளை சாப்பிட்டு பூமி குப்பைமேடு ஆகாமல் காப்பாற்றி வருகின்றது. கழுகுகள் அருகிவிட்டால் தொன்று நோய்களின் தாக்கம் உலகில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிடும்.

மென்மையான சிறகுகளோ, உரோமமோ இல்லாத தலை, சதையைப் பிய்த்து குத்திக் கிழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் கத்தி போன்ற கூர்மையான அதன் அலகு, அதன் வடிவம் போன்றவை பார்ப்பவர்களுக்கு இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

இப்படி மனிதர்கள் உட்பட பெரிய விலங்குகள் பறவைகளே அஞ்சும் கழுகிடம் ஒரு சிறிய பறவை கொஞ்சமும் பயமின்றி சேட்டை செய்யும் காட்சி அடங்கிய கானொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் கலவிதமான கமெண்ட்டுகளையும் பெற்று வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.