;
Athirady Tamil News

தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – கொழும்பு கிளையின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

0

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாக தமிழரசு கட்சி உள்ளது. என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக்கிளை செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது.

வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்கின்றார் எனவே தான் பெண்கள் ஏதேனும் தொழில் முயற்சிகளை செய்ய வேண்டும். அதன் மூலம் வருமானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக கடந்த காலங்களில் நான் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

பெண்கள் சும்மா இருக்கிறார்கள் என யாரும் செல்லாதவாறு பெண்கள் வருமானம் ஈட்ட வேண்டும். என்பதே எனது இலக்கு

தமிழரசு கட்சி பெண்களுக்கு முன்னுரிமை அழிக்கவில்லை. 10 வருடங்களுக்கு அதிகமாக தமிழரசு கட்சியில் இருந்துள்ளேன். அந்த வகையில் கூறுகிறேன். தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாகும்.

அதில் இருந்து தோல்வி அடைந்த பெண்ணாக இருக்க கூடாது என்பதற்காக அதில் இருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டேன்.

தமிழ் மக்கள் கூட்டணி ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றார்கள். பெண்களுக்கு பாதுகாப்பான கட்சியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக தமிழ் மக்கள் கூட்டணி இருக்கின்றது.

பெண்களில் இருந்து மாற்றம் வர வேண்டும் என்பதல் எனக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.