;
Athirady Tamil News

சீன மக்கள்தொகை 3-வது ஆண்டாக தொடர்ந்து சரிவு!

0

சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், வயதான மக்கள்தொகை அதிகரித்து வருவதும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்து இருக்கிறது.

2004 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக இருந்தது. தற்போது முந்தைய ஆண்டைவிட13.9 லட்சம் அளவிற்கு குறைந்துள்ளது.

பெய்ஜிங்கில் அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கிழக்கு ஆசியாவில் ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளில் குழந்தைப் பிறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்தாகத் தெரிவித்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்துவரும் நாடுகளான ஜப்பான், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளுடன் தற்போது சீனாவும் இணைந்துள்ளது.

அதிகரித்துவரும் செலவினகள் மற்றும் உயர்கல்விக்கான செலவுகள் போன்றவை ​​திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போடவோ அல்லது குழந்தையே வேண்டாம் என்று முடிவுக்கோ காரணமாக அமைவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.