;
Athirady Tamil News

இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபா

0

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களின் உணவு வகைகளில் ஒரு முக்கிய மூலப்பொருளான பச்சை மிளகாயை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி
சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேங்காய் மொத்த விற்பனை விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாயும், உள்ளூர் சந்தையில் 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.