;
Athirady Tamil News

இந்தியாவில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்த ஆபத்தானபொருள்; ஆடிப்போன அதிகாரிகள்

0

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற 35 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

கூட்டாளி ஒருவருடன் கைது
வவுனியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, யாழ்ப்பாணம் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்த 111 கிலோகிராம் 975 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று காலை(24) இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கூட்டாளி ஒருவருடன் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் மாமுனே, சம்பியன்பட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 35 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியானது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.