ட்ரம்பிற்கு 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கும் மார்க் ஜூக்கர்பெர்க்
ட்ரம்பிற்கு மார்க் ஜூக்கர்பெர்க் 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க உள்ளார்.
மார்க் ஜூக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு 25 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப் சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 6, 2021 அன்று கேபிடல் ஹில்லில் நடந்த கலவரங்களுக்குப் பிறகு, மெட்டா டிரம்பின் கணக்கை Facebook மற்றும் Instagram-ல் இருந்து நீக்கியது.
அப்போது டிரம்ப் பதவியில் இருந்தார். மெட்டா நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்தார்.
இப்போது இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க ஜுக்கர்பெர்க் விரும்புகிறார்.
இழப்பீட்டில் 22 மில்லியன் டொலர் டிரம்பின் ஜனாதிபதி நூலகத்திற்கும், மீதமுள்ளவை சட்ட கட்டணம் மற்றும் பிற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.