;
Athirady Tamil News

மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்த இளைஞர்

0

இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகா கும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.

ஒரே வாரத்தில் ரூ.40,000
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அதேபோல, தங்க பாபா உள்ளிட்ட சாமியாரும் வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் தனது காதலி கூறிய ஐடியாவால் மகாகும்பமேளாவில் வேப்பங்குச்சி விற்று ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளார்.

அதாவது இந்த இளைஞர் முதலீடு இல்லாமல், மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல் துலக்குவதற்காக Neem datun என்ற வேப்பங்குச்சியை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் மகா கும்பமேளாவிற்கு பணம் சம்பாதிப்பதற்காக வந்தேன். ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்துள்ளேன். இந்த யோசனையை எனக்கு எனது காதலி தான் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.