இராவண எல்ல வனப்பகுதி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பதுளை இராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த காட்டுத்தீயினால் இதுவரை 600 ஏக்கருக்கும் அதிகமான பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.
மீண்டும் தீப்பரவல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.