;
Athirady Tamil News

கொழும்பில் 155 ஆம் இலக்க பஸ் சேவை ; பயணிகள் மகிழ்ச்சி

0

நீண்ட கோரிக்கையின் பின்னர் கொழும்பில் இன்று (11) முதல் 155 ஆம் இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்குளி தொடக்கம் சொய்சாபுர வரை செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

155ஆம் இலக்க பஸ் சேவை
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஆலோக கருணாரத்ன தலைமையில் வடகொழும்பு நகர சபை உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற தனையடுத்து குறித்த பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீண்டகால தேவையாகவும் கோரிக்கையாகவும் இருந்து வந்த வடகொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.

வடகொழும்பு நகர சபை உறுப்பினர் ஏனைய நகரசபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பஸ்கள் அப் பகுதியில் இயக்கப்பட்டன.

எனினும் போக்குவரது தொடர்பில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக 155ஆம் இலக்க பஸ் சேவையின் அவசியத்தையும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இதன் பயனாக இன்று திங்கட்கிழமை (11) காலை 05.30 மணி முதல் 155 பஸ் சேவையானது மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.