கார்னிவேல் சரிந்து விழுந்து விபத்து 11 வயது குழந்தை உள்பட இருவர் படுகாயம்

கேகாலை தெஹியோவிட்ட பகுதியில் கார்னிவேல் நிகழ்வில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 11 வயது குழந்தை உள்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கத்தரிக்கோல் ஊஞ்சலில் இருந்த வாளி சரிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.