;
Athirady Tamil News

கொலையில் முடிந்த அன்னதான விருந்து

0

வரகாபொல பொலிஸ் பிரிவின் அத்னாவல பகுதியில் நேற்று (08) இரவு ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அத்னாவல, வரகாபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் தனது சகோதரரின் வீட்டில் நடைபெற்ற அன்னதான விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்ய வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.